(படுவான் பாலகன்) பல வளங்களாலும் சிறப்புற்று விளங்கும் ஈழமணித் திருநாட்டின் கண்ணே மட்டக்களப்பு நகருக்கு தெற்கே படுவான்கரை பெருநிலத்தின் பாரம்பரிய சிவபமியாம் கொக்கட்டிச்சோலை பதியில் திருத்தான்தோன்றீஸ்வரப் பெருமானுக்கண்மித்து கோயில் கொண்டெழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கண்ணகி அம்மனுக்கும் பரிவாரத் தெய்வங்களுக்கும் நிகழும் ஜய வருசம் வைகாசி மாதம் 21ம் நாள் (04) புதன்கிழமை மக நட்சத்திரமும் ப+ர்வ பக்க ஸப்தமித் திதியும் அமிர்த சித்த யோகமும் கூடிய தினத்தில் முற்பகல் 10மணி 21நிமிடம் தொடக்கம் 11மணி 30நிமிடம் வரையுள்ள சிங்க லக்கினத்தில் கூடிய சுப மூகூர்த்த வேளையில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.இன்று(02) பிற்பகல் 04.00மணி தொடக்கம் ஆசாரியவரணம், விநாயக வழிபாடு, புண்ணியாகவாசனம், அனுக்ஞை, சாந்தி கர்மங்களுடன் அதிவாசக் கிரியையும்,ஸ்தாபனாதிகளும் நடைபெறவுள்ளதுடன் நாளை(03) செவ்வாய்க்கிழமை காலை 06.00மணி தொடக்கம் பிற்பகல் 04.00மணி வரை ஞெம்போதகம்(பத்திரக்காப்பு) சாத்தும் நிகழ்வும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இக்கிரியைகள் அனைத்தும் சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் (கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரம், களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயங்களின் பிரதமகுரு) அவர்களின் தலைமையிலான குழுவினர்கள் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















