வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவை

(சதீஸ்)
வவுணதீவு பிரதேசத்தின் ஆயித்தியமலை கிராமத்தில் “கிராமம் கிராமமாக வீடு வீடாக - நிறைவான இல்லம் வளமான தாயகம்” என்ற தொனிப்பொருளில் நடமாடும் சேவை இன்று 10ம் திகதி காலை இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் தலைமையில் மேற்பபடி நடமாடும் சேவை இடம்பெற்றது.

இதில் உன்னிச்சை, நெடியமடு, ஆயித்தியமலை-வடக்கு, ஆயித்தியமலை -தெற்கு, மகிழவட்டவான் மற்றும் நரிப்புல்தோட்டம் ஆகிய ஆறு கிராம சேவகர் பிரிவுகளுக்கான சேவைகள் வழங்கப்பட்டது.

இதன்போது, காணி, திவிநெகும திணைக்களம்(சமுர்த்தி), பதிவாளர் நாயகத் திணைக்களம், விவசாயம், கால்நடை வளர்ப்பு, ஆட்பதிவு திணைக்களம், பொலீஸ் பிரிவு உட்பட பல பிரிவுகளும் திணைக்களங்களும் இந் நடமாடும் சேவையின்போது சேவைகளை வழங்கியது.