ஈரளக்குள இலாவாணை குமாரர் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ விழா

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்பற்று பிரதேச செயலக ஈரளக்குள கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட இலாவாணை குமாரர் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ விழா இம்முறையும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. 

இலாவாணை குமாரர் கடவுளின் அருள்வேண்டி பக்தர்கள் சுமார் 18 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து மாட்டுவண்டி, உழவு இயந்திரம் மற்றும் கால் நடையாகவும் காடுகள் மற்றும் சிறு சிறு மலைகளையும் கடந்து மிகவும் கஸ்டப்பட்டு ஆலயத்திற்கு வருகைதந்திருந்ததை காணக்கூடியதாகவிருந்தது, வருகை தந்த பக்தர்கள் பொங்கல் வைத்து கடவுளுக்கு படைத்து வழிபட்டனர். அத்துடன் பக்தர்கள் குமாரர் கடவுளுக்கு நேர்த்தி கடனையும் செலுத்த தவரவில்லை பசுமாடு, எருமைமாடு அத்துடன் ஆடு, கோழி, பிள்ளைக்கு தலைமுடி இறக்கல், பிள்ளை கூறிவிற்றல் என பல்வேறு நேர்த்தி கடன்கள் செலுத்தப்பட்டதும் குறிப்படத்தக்கது.