வவுணதீவில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சரினால் சிறுகைத்தொழில் மேம்படுத்தும் நோக்குடன் தொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

(சதீஸ்)
வவுணதீவு பிரதேசத்தில் சிறுகைத்தொழில், விவசாயம் போன்ற தொழிலை ஊக்குவிக்கும் நோக்குடன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஒருதொகுதி தொழில் உபகரணங்கள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களால் இன்று  23ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் ஏற்பாட்டில்  மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது..

மேற்படி உபகரணங்கள் விவசாயம்,தச்சு,மேசன் தொழில் புரிவோருக்கு மூன்று தொழில் தரத்திலான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

'இப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மகளீர் சங்கங்களுக்கும் ரூபா 230இலட்சம் நிதி ஒதுக்கிடு செய்யப்படவுள்ளதாகவும் இந் நிதியினைக் கொண்டு அவர்கள் சங்கத்தை வலுப்படுத்தி அதன்மூலம் படிப்படியாக நன்மையடயலாம். மேலும், இப் பிரதேச மக்களின் தேவைக்கேற்ப அவர்களின் தேவையினை அடிப்படையாகக் கொண்டு வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் வழங்கப்படும். இதன்மூலம் குடும்பவருமானம் அதிகரிக்கும்' போன்ற விடயங்களையும் இங்கு இடம்பெற்ற கூட்டத்தில் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்

இதன்போது பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன், அமைப்பாளரும் பிரதியமைச்சரின் செயலாளருமான திருமதி.ஞா.ருத்திரமலர், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் T.நிர்மலராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.