'கிராமங்கள்தோறும் நடமாடும்சேவை' சேவையினைப் பெற்றுக்கொண்ட மக்கள் நன்றி தெரிவிப்பு

(சதீஸ்)
மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் கிராமங்கள்தோறும் நடைபெற்றுவரும் நடமாடும் சேவை இன்று காஞ்சிரங்குடா கிராமத்தில் இடம்பெற்றது.

இச் சேவை வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது காஞ்சிரங்குடா,கொத்தியாபுலை,இலுப்படிச்சேனை,பன்சேனை போன்ற கிராம மக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது.

இதில் திருமணப் பதிவு,பிறப்புப இறப்பு பதிவு, பொலீஸ் சேவைகள்,ஆட்பதிவு திணைக்கள சேவைவைகள், காணி, வாழ்வின் எழுச்சி திணைக்களம், மிருகவளர்ப்பு வைத்தியப்பிரிவு,விவசாயம், சிறுவர் மேம்பாட்டுப் பிரிவு போன்ற பல பிரிவுகளின் சேவைகள் இடம்பெற்றது.

இந் நடமாடும் சேவையின்போது பலர் உடனடிசேவைகளைப் பெற்றுக்கொண்டு சேவையினை வழங்கிய பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு நன்றி தெரிவித்ததனை காணக்கூடியதாக இருந்தது.

இந் நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,கொக்கடிச்சோலை பொலீஸ் பொறுப்பதிகாரி உட்பட அரச அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

வவுணதீவு பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திற்கப்பால் இந் நடமாடும் சேவை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.