இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சரும், மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொண்டார்.
இதில் கௌரவ அதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ் ஸ்ரீகிருஸ்ணராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக கல்குடா வலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ரி. அனந்தரூபன், கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ். ரவிராஜ், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன், வலயத்தின் பொறியியளாலர் கே. கிருஸ்ணதாசன் மற்றும் வேல்ட்விசன் நிறுவன பிரதிநிதி, கிராம சேவகர், ஏனைய பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
2008 ஆம் ஆண்டு முதல் தகரரத்தினால் அமைக்கப்பட்ட கொட்டிலில் பெரும் சிரமங்களை அனுபவித்த எமது ஏழைச் சிறார்களின் கஸ்ரத்தைப் போக்க செயலாற்றிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் மற்றும் பிரதேச மக்கள் நன்றிகளைத் தெரிவிதனர்.












