கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தில் கிரான் தெற்கு பிரதேச செயலகத்தினால் நடைபெற்ற சேவைகள்

(சித்தாண்டி  நித்தி) கோராவெளி கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தில் சடங்கை முன்னிட்டு கிரான் தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இவ்வருடமும் சிறப்பான முறையிலே வருகை தந்த பக்தர்களின் நலன் கருதி பல்வேறுபட்ட சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டன. அந்த வகையில் தாகசாந்தி நிலையம், போக்குவரத்து, குடிநீர் வசதி, சுகாதாரம், ஒலிபெருக்கி சேவை, கூடாரம், வாகன தரிப்பிடம் மற்றும் பல சேவைகளுடன் பாதுகாப்புக்கென இராணுவத்தினருடன் இணைந்து பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிகழ்வை முன்னிட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கடமையில் ஈடுபடுத்தபட்டுடிருந்தனர்.