சித்தாண்டி –மாவடிவேம்பு ஸ்ரீ பத்திர காளியம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதிப்பு நிகழ்வு (வீடியோ இணைப்பு)

(நித்தி) சித்தாண்டி –மாவடிவேம்பு ஸ்ரீ பத்திர களியம்பாள் ஆலயத்தின் 51வது வருடாந்த சடங்கு உற்சவத்தினை முன்னிட்டு கடந்த 21.06.2014 திகதி உதயன்மூலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து மடப்பெட்டி எடுத்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலய உற்சவ விழாவில் இறுதி நாளகிய இன்று (27.06.2014) மிகவும் சிறப்பான முறையில் இவ்வருடமும் தீ மிதிப்புடன் நிறைவடைந்தது. 

காளியம்பாளின் 51 வருடாந்த உற்சவ இறுதி நாளாகிய இன்று ஆயிரக்காணக்கான பக்தர்கள் வருகை தந்ததுடன் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் என நூற்றுக்கணக்காவர்கள் தீ மதிப்பிலும் கலந்துகொண்டனர். வருகை தந்த பக்தர்களின் நலன்கருதி விஸ்வகுல மக்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமாகிய சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களும் இணைந்து அன்னதானம் ஏற்பாடு செய்து பக்தர்களுக்கு வழங்கியிருந்ததும் குறிப்படத்தக்கது.