(சதீஸ்)
மட்டக்களப்பு பாலமீன்மடு- திராய்மடு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய புனராவர்த்தன ப்ரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 30.06.2014ம் திகதி நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
முருகப்பெருமானின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்றயதினம் 28ம் திகதி ஆரம்பமாகி இன்று 29ம் திகதியும் இடம்பெற்றது.
இவ் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாளை காலை 8.00 மணியளவில் கும்பாவிஷேக பெரும் சாந்தி விழா நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பக்தர்கள் அனைவரையும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளைப்பெற்றேகுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைக்கின்றனர்.












