தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நிதி உதவியில் எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்புக்கூடாக வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (03) மாலை மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பணிப்பாளர் கேமன் குமார், மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவரும், எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசன் அமைப்பின் தலைவருமான வ. கமலதாஸ், செயலாளர் வி. வாமதேவன், வளவியலாளர் ரி. சக்திவேல், ஏ. ரமேசானந்த், மாவட்ட மீனவர் சமாச தலைவர், எஸ். பியதாச, மீன்பிடி திட்ட ஆலோசகர் ரி. ராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே. ரஞ்சித்குமார் மற்றும் பயனாளிக் குடும்பங்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது மீன் பதனிடல், வீட்டுத்தோட்டம், சிறு வியாபாரம் போன்ற தொழில்களை வாழ்வாதார தொழிலாக கொண்ட பெண் தலைமைத்துவமுடைய 45 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதுடன் அந் நிகழ்வின்போது பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் இருந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று சிறப்பாக செயற்பட்டு வரும் பெண்களுக்கே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இவர்கள் மாவட்டத்தின் கல்லாறு முதல் வாகரை வரையான அனைத்து பிரதேசங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.