மட்டக்களப்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரினால் வாவிக்கரை பூங்கா திறந்துவைப்பு

(உ.உதயகாந்த் & சிவம்)

மட்டக்களப்பு  பூம்புகார் பகுதியின் ஆற்றங்கரை ஓரத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ''வாவிக்கரை பூங்காவினை'' மாநகர ஆணையாளர் மா உதயகுமார் தலைமையில் இன்று 16.06.2014 காலை 8.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாடாவினை வெட்டி திறந்துவைத்த இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பொன்.ரவீந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் .சார்ள்ஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் காமினி, மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் பூ.குணரெட்னம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.தவராசா, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தலைமையாக பொலிஸ் பரிசோதகர் எட்டியாராட்சி , மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், மாநகர பொறியியலாளர் அச்சுதன் ஆகியோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் 20 மில்லியன்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட  இப்பூங்காவானது இன்றுமுதல் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.