வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள காமாட்சி வித்தியாலயத்தில் அங்குள்ள மாணவர்களுக்கு பிராந்திய சுகாதார பிரிவின் எற்பாட்டில் நடமாடும் பற்சிகிச்சை முகாம் ஒன்று கடந்த வியாழக்கிழமை 26ம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வு பிராந்திய பல்வைத்தியநிபுணர் சயனொளிபவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, மாவட்ட சுகாதார மேற்பார்வை பரிசோதகரும் சிரேஷ்ட போதனாசிரியருமான பி.தேவராஜா மற்றும் சுகாதாரப் பரிசோதகபயிற்சி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின்போது மாணவர்களுக்கு வாய், பல் பரிசோதனை மற்றும் பூச்சியினால் தாக்கமடைந்த பற்கள் புடுங்கப்பட்டு நிக்கப்பட்டது.












