மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேடதேவை உடையோர், ஊனமுற்றோர், விதவைகள், அனாதைப் பிள்ளைகள் போன்றோர்களுக்கான தேவைகள் அதிகமாக உள்ளதால் கிழக்கு மாகாண சபையால் ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடானது அதிகரிக்கப்படல் வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு மாகாணசபை உறுப்பினர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இம்மாவட்டமானது 14 பிரதேசசெயலாளர் பிரிவுகளையும் 345 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் 965ற்கு மேற்பட்ட கிராமங்களையும் கொண்டுள்ளது. இங்கு ஒரு இலச்சத்து அறுபத்தி ஐயாயிரம் குடும்பங்களை உள்ளடங்கலாக ஐந்து இலட்சத்தி 90ஆயிரம் மக்கள் வாழ்கின்றார்கள்.
இம் மாவட்டம் கடந்த 30 ஆண்டு காலத்தில் யுத்த அனர்த்தத்தாலும், சூறாவளி, (சுனாமி) கடல்கோள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பயனடையக் கூடிய வருமானம் பெறக்கூடிய பயன் தரும் மரங்கள், கால்நடைகள், பறவையினங்கள், விவசாய பயிர்ச்செய்கை வளங்கள், சிறிய குளங்கள் முதலானவை, அழிவிற்குள்ளாகியுள்ளன.
இவற்றை விட கிராமங்களி;ன் சுயதொழில்களுக்கு ஏதுவான மேட்டுநிலப் பயிர் செய்கைகளுக்கு பயன்படுத்தப்படும் விதைப்பருப்புக்கள் தானியங்கள், அழிவிற்குள்ளாகியுள்ளன.
அடிக்கடி இடம் பெற்ற இடம் பெயர்வுகளால் குடியிருப்புக்காணிகளில் இருந்த பயன்தரும் வளங்கள், வீட்டுத் தளபாடங்கள் அழிந்து விட்டன.
கிராமங்களில் ஒரளவு வருமானத்தை ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த அதிகமான குளங்களிலிருந்த மீனினங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மனித உழைப்பினால் வருமானத்தைப் பெற்று வாழ்கை கடத்தி வந்தவர்கள் அனைத்து வேலைகளும் இயந்திர மூடாக மேற் கொள்வதால் மனித சக்திக்கு வேலை இல்லாத நிலை தோற்று விக்கப்பட்டுள்ளது.
நச்சுத்தன்மை வாய்ந்த கிருமி நாசினிகளை அதிகம் விளைநிலங்களில் பாவிப்பதால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் வருமானத்தை ஏற்படுத்தும் பயிரினங்கள் அழிவடைந்து விட்டன இவைகளினால் கிடைத்து வந்த வருமானங்கள் இல்லாமல் போய் உள்ளன.
இத்தோடு குடும்பங்களின் வருமானத்தை ஈட்டித்கொடுத்த உழைப்பாளிகள், குடும்பத்தலைவர்கள் மரணித்தும் உள்ளனர். மேலும் இதனால் மாவட்டத்தில் 20 வீதத்திற்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட நிலமைகள் இவ்வாறிருக்க பின்வரும் சமூகதேவைப் பாடுடையோர் நிலமைகள் இங்கு பாரியதோர் சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாக வடிவம் எடுத்துள்ளது. இந்தவகையில்,
(1)விசேடதேவையுடையோர் தொடர்பாக:-
---------------------------------------------------------------------------------
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் சுமார் 600 முதல் 850 வரையான விசேடதேவையுடையோர் வாழ்கின்றார்கள். இம் மாவட்டத்திலுள்ள 14பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சுமார் 10,500ற்கும அதிகமாக விசேடதேவையுடையோர் வசிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆயினும்'மகிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் 14 பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் இருந்து 700 பேருக்கு மாத்திரம் ஊனமுற்றோருக்கான மாதாந்த கொடுப்பனவாக ரூபாய் 3000ஃஸ்ரீ வழங்கப்பட்டு வருகிறது. ஊனமுற்ற அனைவருக்கும் இக் கொடுப்பனவு வழங்கப்படுவதற்கு ஏதுவாக கிழக்கு மாகாணஅமைச்சின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படல் வேண்டும்.
(2)யுத்தம் காரணமாக கை,கால் இழந்தவர்கள்:- (ஊனமுற்றோhர்);
-------------------------------------------------------------------------------------------------------------
மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் (கைகளை இழந்தோர் 375பேர், கால்களை இழந்தோர் 625பேரும்;;) அண்ணளவாக 1025 பேர் இவர்களது சுயதொழில் வாய்ப்பிற்காக கடன்வசதி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படுவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப் படல்வேண்டும். மாதாந்த மானியஉதவியுடன், கடன் வசதித் திட்டமும் இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். இத்தகைய உதவிகள் வழங்கத்தக்க வகையில் மாகாணஅமைச்சின் நிதிஒதுக்கீடுகள் அதிகரிக்கப் படல்வேண்டும்.
(3)விதவைகள் தொடர்பாக:-
---------------------------------------
மாவட்டத்தில் 14பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் 17,500 விதவைகள் காணப் படுகின்றார்கள். யுத்தம்காரணமாகவும், இயற்கை மரணங்களாலும் விதவையாக்கப் பட்டவர்களோடு, கணவர்களால் கைவிடப்பட்டவர்களுமாக இத் தொகை எப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்து காணப்படுகின்றது.
இவர்களில் 4-5 பிள்ளைகளைக் கொண்ட விதவைகளும், இளம்வயதுடைய விதவைகளும் அடங்குகின்றனர்.
நிரந்தர வருமானமற்ற இவர்களுக்கு முறையான வீட்டுவசதிகள் தேவையாக உள்ளன.பல அமைப்புக்கள் இவர்களுக்கான உதவிகளை வழங்க முன்வந்த போதும் இவர்கள் தொடர்ந்தும் ஏனையோரில் தங்கி இருப்பவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இவர்களில் ஒரு பகுதியினருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூபாய் 250ஃஸ்ரீ முதல் 500ஃஸ்ரீ வரை மாதந்த பொது உதவிப்பணமாக குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றது.
இவ்வாறு மாதாந்த பொது உதவிப்பணத்தை பெறுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் சுயதொழில் வாய்ப்பின் நிமித்தம் இப்பணம் மொத்தமாக வழங்கப்படும் சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.
இக் கொடுப்பனவு அதிகரிக்கப்படவும், சுயதொழில் கொடுப்பனவு அனை வருக்கும் வழங்கப்படத் தக்கதாகவும் கிழக்கு மாகாண அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படுதல் அவசியமாகும். இவ் விதவைகளின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகளும் அமுல் படுத்தப் படவேண்டிய தேவை காணப்படுகின்றது.
(4)அனாதைப் பிள்ளைகளின் தேவைகள்:-
---------------------------------------------------------------------------
இம் மாவட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட தொடர் அனர்த்தங்களால் பெற்றோர் இருவரையும் இழந்து அனாதைகளாக மாவட்டத்தில் சுமார் 650 பேர் உள்ளனர். இத்தோடு பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த பிள்ளைகளாக மாவட்டத்தில் சுமார் 4600பேர் உள்ளனர்.
இவர்களது கல்வி நடவடிக்கைகள், தங்கமிடவசதிகள், சுயதொழில் உதவிகள் போன்றவையும் செய்யப்பட வேண்டியது கிழக்கு மாகாண சபையின் சமூகசேவைகள் திணைக்களத்தினது தார்மீகக் கடமையாகும்.
இத்தகைய தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யக் குறித்த திணைக்களத்தின் வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் இவர்கள் எதிர்நோக்கும் நலன் புரித்திட்டங்கள் விரைவாகவும், சிறப்பாகவும் முன் எடுக்கப்பட நடவடிக்கை எடுப்பது யுத்த அனர்த்த மீழுகையிலிருந்து பாதிக்கப்பட்டு பரிதவிப்போரை மீட்டெடுக்கும் ஒரு தார்மீகப் பொறுப்பு கிழக்கு மாகாணசபைக்கு உள்ளது.
எனவே கிழக்கு மாகாண சபையானது இப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண அதிகளவில் நிதி ஒதுக்கீட்டினை ஒதுக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். எனக்கேட்டுக்கொள்வதோடு, இதுதொடர்பாக மாகாணசபையில் விசேட பிரேரணை ஒன்றையும் முன்மொழிய உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதன் பிரதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.