(சுழற்சி நிருபர்)
மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி மாணவர்களின் கல்வி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி. உதயரூபன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மஹாஜனக் கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் தீவிர அக்கறை எடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் அதிபரையும் சில ஆசிரியர்களையும் இடமாற்றக் கோரி மாணவர்களைப் பலவந்தப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தி கல்லூரியின் தனிது;துவமான கலாசாரத்தைச் சீர்குலைத்த விஷமிகளிடமிருந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அக்கறை கொண்டுள்ள மட்டக்களப்பு கல்விச் சமூகம் முன்வரவேண்டும்.
இக்கல்லூரியில் கற்கும் மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும். கல்லூரியின் வளப்பயன் பாட்;டில் உயர் தொழிநுட்பத்துடன் கூடிய வினைத்திறனையும் அதிகரிக்க வேண்டும்.
இந்த நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அதிகூடிய நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்ளும் கல்லூரி அதிபரை மாற்றுவதற்கும் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் குழப்ப நிலையை ஏற்படுத்துவதற்கும் சில தீய சக்திகள் முயற்சித்து வந்துள்ளன.
இத்தகைய தூரநோக்கற்ற விஷம சக்திகளின் கலாச்சாரம் தோற்கடிக்கப்பட வேண்டும், இதற்காக மட்டக்களப்பு கல்விச் சமூகம் மன்வரவேண்டும் என்றும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
பல்லின சமூகத்தின் மீது கலாச்சார சீரழிவுகளையும் கல்வி உரிமைகளையும் சீர்குலைத்து மாணவர்களுக்கு உள ரீதியிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும் தீய சக்திகளுக்குப் பின்னாலுள்ள அநாகரிக அரசியல் நிகழ்வுகளை தோற்கடிப்பதற்கும் சக்தி மிக்க இலங்கை ஆசிரியர் சங்கம் என்றும் தயாராக உள்ளது.
இந்த தீய சக்திகள் தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக மாணவர்களைக் குழப்பி கிழக்கு மாகாணக் கல்வி நிரவாகத்தில் சட்ட ஆட்சிக்குப் புறம்பான செயல்களைச் செய்ய மனைகின்றன.
இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எமது மாணவர்களின் கல்வி உரிமையையும் இயல்பான கற்றலையும் கற்பித்தலையும் உறுதிப்படுத்த முடியும்.
மஹாஜனக் கல்லூரிக்கு உள்ளேயும் வெளியேயும் செயற்படும் ஒரு சில தீய சக்திகள் கல்லூரியன் கலாசாரத்திற்கு முரணாகச் செயற்பட்டு களங்கம் விளைவிக்க முயல்கின்றார்கள்.
இவர்கள் பல்வேறு விதமான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதால் பொறுப்புக் கூறலுக்கும் விசாரைணக்கும் உட்பட்டுள்ளார்கள். இதனாலேயே இவர்கள் விரும்பத் தகாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்பது உறுதிப்படத்தப்பட்டுள்ளது.
ஒரு சில தனியார் கல்வி நிலைய முதலாளிகள் இக்கல்லூரி மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவர்கள் விஷமிகளின் பின்னால் நின்று அப்பாவி மாணவிகளின் கல்வியைக் குழப்புவதற்கும் அனுமதிக்க முடியாது.
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.