(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் 4ம் நாள் பச்சை வெட்டு திருச்சடங்கு பகல் பூசையானது இன்று(12) வியாழக்கிழமை சுவர்ண காவல வேடகுல மக்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது.இச்சடங்கினை சிறப்பிக்கும் முகமாக அம்மனுக்குரிய சிலம்பு மற்றும் பாற்குடபவனி எடுத்துவரும் நிகழ்வானது கொக்கட்டிச்சோலை நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து வசந்தன், காவடி நடனம், கும்மி, மேள இசை மற்றும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக கொக்கட்டிச்சோலை பிரதான வீதியினூடாக கொக்கட்டிச்சோலை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று அதன் பின் திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு ஆலயத்தை அடைந்து பகல் பூசை மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.























