மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று செங்கலடிப் பிரதேச செயலக கலை மன்றங்கள் இணைந்து வழங்கிய கலை சங்கம நிகழ்வு இன்று சனிக்கிழமை 28.06.2014 தன்னாமுனை பொன்தானா மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரதேச செலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற கலைத்துறைப் பேராசிரியர் எஸ். மௌனகுரு, மாவட்ட செயலக கலாசார இணைப்பாளர் கே. மலர்ச்செல்வன், ஏறாவூர்ப்பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் நவவதனி சசிதரன், கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தன் உள்ளிட்ட இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய மற்றும் நவீன கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. கலைப்பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளோருக்கு அதிதிகள் நினைவுப் படிகங்களை வழங்கினர்.
நாடகத்துக்காக சுதாகரி மணிவண்ணன், நடனம் எஸ். மிதுலா, நாட்டுக் கூத்து கந்தையா வேலுப்பிள்ளை, நடன இயக்குனர் எஸ். கிருஷ்ணப்பிள்ளை, குறுந்திரைப்பட இயக்கம் ரீ. விதுர்ஷன், இலக்கியம் எஸ். சண்முகம், அறிவிப்பு ஏ. சதானந்தராஜா ஆகியோர் நினைவுப் படிகம் வழங்கி, பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
* இச் செய்தியில் உள்ள படங்களை தயவுசெய்து எமது Battinews நிருவாகம் அல்லது செய்தியாளர்களின் அனுமதியின்றி கொப்பிபண்ணி ஏனைய இணையத் தளங்களில் இடவேன்டாம்.












