( ரவிப்ரியா )
கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் தற்காலிக விரிவுரையாளரும் ஓவியருமான திரு.வே.ஹோகுலரமணனின் முதலாவது கூத்து எனும் தனி ஓவியக் கண்காட்சியானது எதிர் வரும் 05/06/07 -06-2014ம் திகதிகளில் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணம் கோவிந்தராஜா அவர்களும் கௌர விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஓவியர் திரு.வே.ஹோகுலரமணனின் தனி முயற்சியில் நடைபெறும் இக் கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இவர் இதற்கு முதல் பல ஓவியக் கண்காட்சிகளை லண்டன்,கொழும்பு, மட்டக்களப்பு போன்ற இடங்களில் பல ஓவியர்களுடன் இணைந்து நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஓவியரின் தூரிகையால் உருவான உயிரோவியங்கள் சில உங்கள் பார்வைக்காக






















