தமிழ் அழிந்து போகுமா ? மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆதாரங்கள் அற்ற கூற்று, விமர்சனக் கண்ணோட்டம்



தமிழ் அழிந்து போகுமா?  மாகாண கல்விப் பணிப்பாளரின்ஆதாரங்கள் அற்ற கூற்று, கோணாமலை கோணேசபிள்ளையின் விமர்சனக் கண்ணோட்டம்.

மகாணக் கல்விப் பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிசாம் அவர்களினால் நிகழ்வொன்றில் பேசப்பட்டதாக மே மாதம் 7ஆம் திகதி வீரகேசரியில் 'கலாநிதிப் பட்டம் பெற்றவர்களும் இந்நாளில் கதைக்க மறுக்கும் தமிழ் அழிந்து போகுமா?' என்னும் தலைபில் வெளிவந்த செய்தி தொடர்பார்க மண்டூர் கோணாமலை கோணேசபிள்ளை அவர்களால் வெற்றிநியூஸ் செய்திக்கு அனுப்பப்பட்ட விமர்சனக் கணணோட்டதில் கூறிய கருத்துக்கள் வருமாறு

மே மாதம் 7ஆம் திகதி வீரகேசரியில் 'கலாநிதிப் பட்டம் பெற்றவர்களும் இந்நாளில் கதைக்க மறுக்கும் தமிழ் அழிந்து போகுமா?' என்னும் தலைபில் வெளிவந்த செய்;தியில்

பல செம்மொழிகள் வழக்கொழிந்து போயுள்ளன. அந்தப் பட்டியலில் தமிழும் வந்துவிடுமா? என்ற நிலையும் உள்ளது. ஆங்கிலேயர்களைப் பொறுத்தவரை பல முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் அந்ந மொழி நிலைப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் எமது பேராசிரியர்கள் கூட தமிழ் மொழியில் பேச வெட்கப்படும் நிலைமை காணப்படுகிறது. அவர்கள் கலாநிதிப்பட்டம் எடுத்திருப்பார்கள். ஆனால் தமிழ் மொழியைப் பேசுவதில்லை.

என்று தரப்பட்டுள்ளது. இது பேச்சாளரின் கூற்றாக இருந்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பல செம்மொழிகள் வழக்கொழிந்து போயுற்றன என்பதற்கு 10 உதாரணங்களாவது தர முடியுமா? உலகிலே 6,000 மொழிகள் உள்ளன என்றும் இவற்றுள் 68 மொழிகள் ஒவ்வொன்றும் 100 இலட்சம் மக்களுக்கு மேல் பேசப்படுகின்றன என்றும் தமிழ் 900 இலட்சம் மக்கள் அளவில் பேசப்படுகின்றது என்றும் கலைக் களஞ்சியங்களும் உலகப் பஞ்சாங்கமும் கூறுகின்றன. இந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் தொகை 700 இலட்சம் அளவில் உள்ளது. இது மற்றைய மொழி பேசும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. முதலாம் இடத்தில் இந்தியும் இரண்டாம் இடத்தில் தெலுங்கும் இருக்கின்றன. எனவே தமிழ் அழிந்துபோகும் என்னும் பீதியை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஆய்வின் அடிப்படையில் மொழிகள் விருந்தியடையும் காலத்தில் ஆதாரம் அற்ற மேல்வாரியான கூற்றுக்களை வெளிப்படுத்துவது வரவேற்கக் கூடிய செயல் அல்ல.

எந்தப் பேராசிரியர்கள் தமிழில் பேச வெட்கபட்டார்; என்று கூறாமல் பேராசிரியர்கள் மீது பழிசுமர்த்துவது நாகரீகமானதல்ல. கலாநிதி பட்டம் பெற்றால் தமிழிலேயே பேசவேண்டும் என்று கொள்ள முடியுமா? தமிழில் 'கம்பராமாயணச் சாரம்'; என்னும் நூலை பேராசிரியர் கா.சுப்பிரமணியபிள்ளை எழுதினார். இந்த நூலுக்கு பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர் அறிமுகவுரை எழுதியுள்ளார். இந்த அறிமுகவுரை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. விபுலாநந்தர் தமிழில் எழுத வெட்கப்பட்டார் என்று கூறலாமா?

'எந்தமொழியும் நிலைத்திருப்பதற்கு அது ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு ஆட்சி அந்தஸ்த்து இல்லாமை துரதிஷ்டவசமானது'. என்றும் இந்தச் செய்தியில் தரப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை யாப்பின் பதிமூன்றாவது திருத்தத்தின் படி இலங்கையில் தமிழும் அரசகரும மொழியாகும்.

Amendment of Article 18 of the constitution of the Democratic Socialist Republic of Sri Lanka
(b) by the addition immediately after the  paragraph (1) of that Article of the following paragraphs:
(2) Tamil shall also be an official language
(3) English shall be the link language



'மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பல தமிழர்களின் வாய்களில் வேறு மொழிகள் வருகின்றன. தமிழ் மொழி வருவதில்லை'. என்றும் கூறப்பட்டுள்ளது. மிக மிக முக்கியமான தமிழர்கள் யார்? எனது கருத்துப்படி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ் நாட்டு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா, வடமாகாண முதல்; அமைச்சர் திரு வி.சி.விக்கினேஸ்வரன், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், கவிஞர் வைரமுத்து, அமைச்சர் டக்லஸ் தேவாநந்தா, தலைவர் இரா.சம்பந்தன், பேராசிரியர் மகேஸ்வரன், அமைச்சர் நாராயணசாமி, டாக்டர் சுவாமிநாதன், காலம் சென்றவர்களான ஸ்ரீ. ராஜாஜி, பேராசிரியர் சி.வி.ராமன், முதல்வர் காமராஜர், பேராசிரியர் சுப்பிரமணியன் சந்திரசேகர், டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, டாக்டர் மு.வரதராசன், கவிஞர் கண்ணதாசன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள் எல்லாம் நன்கு தமிழ் பேசியவர்கள்.

'தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்த்து எங்கேயும் இல்லை' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரிலும் இலங்கையிலும் தமிழ் ஆட்சிமொழியாக யாப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

'இந்தக் காலத்தில் தமிழ்மொழிக்குள் உட்புகுந்து வந்தது. அவ்;வாறு உட்புகுந்தபோது இரண்டு பெரியார்கள் அவர்களது பெயர்கள் சரியாகத்தெரியவில்லை ஒன்று மறைமலை அடிகளார் மற்;றையவர் பரிமேலழகர் என்பவரும் தமிழை அழித்துவிடக்கூடாது என்பதற்காக இயக்கங்களை ஆரம்பித்தார்கள்'. என்றும் தரப்பட்டுள்ளது.

தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் சூரியநாராயண சாஸ்திரியார். இவர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார். இவர் தனது பெயரை பரிதிமால்கலைஞன் என்று மாற்றிக்கொண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் 'கலை' என்பது சமஸ்கிருதச் சொல்லே. இவரைத் தொடர்ந்து சுவாமி வேதாசலம் தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபட்டார். இவர் தனது பெயரை மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டார். தனது மகள் நீலாம்பிகை அம்மையாருக்கு தனித்தமிழ் பேசுபவரையே திருமணம் செய்துவைக்க முயன்றார். ஆனால் நீலாம்பிகை என்ற பெயர் மாறவில்லை.

சமஸ்கிருதத்தின் செல்வாக்கினாலேதான் ராமாயணம், பாரதம், நளவெண்பா, நைடதம் ஆகிய சிறந்த இலக்கியங்கள் தமிழில் உருவாகின. தமிழில் மேலும் ஓசையைக் குறிப்பதற்கு ஸ,ஜ,ஹ,ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆங்கில மொழி மற்றைய மொழிகளில் உள்ள சொற்களை இணைத்துக்கொண்டு மிக விரைவாக முன்னேறியதனால் தமிழிலும் பிறமொழிச்சொற்கள் இயற்கையாகவே இணையத்தொடங்கின. ஆங்கிலத்தி;ல் 50,000 திக்கும் மேலான கிரேக்க மொழிச் சொற்கள் இணைந்துள்ளன. கிரேக்க மொழியும் ஒரு செம்மொழியாகும். 'கோப்பையிலே என் குடியிருப்பு, கோல மயில் என் துணையிருப்பு' என்னும் பிரபல்யமான பாடலில்  கோப்;பை என்பது 'கப்'; என்னும் ஆங்கிலச் சொல்லில் இருந்து வந்தது. மேலும் பல போத்துக்கீசச் சொற்களு தமிழில் கையாளப்படுகின்றன. பல தமிழ் சொற்களும் ஆங்கிலமொழி, பிரஞ்சு மொழி, யப்பானிய மொழி ஆகியவற்றில் இணைந்துள்ளன. ஆங்கிலத்தில் கறி, அரிசி, கயிறு, கட்டில், வெற்றிலை, இஞ்சி, தடாகம், அணைக்கட்டு, மிளகுதண்ணி போன்ற தமிழ் சொற்கள் இணைந்துள்ளன. மிளகுதண்ணி பிரஞ்சு மொழியில் 'மிளகுரோணி' ஆகிவிட்டது. உறைப்பு யப்பானிய மொழியில் 'கறாய்' ஆகிவிட்டது. எனவே மொழி வளரும்போது மற்றைய மொழிச் சொற்கள் காலத்தின் தேவையால் இணைந்துவிடுகின்றன.

'துரதிஷ்டவசமாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயும் சரி, வேற எந்தக்காலத்திலும் சரி, எந்த ஒரு நிலையிலும் தமிழை அழித்துவிடாத அளவிற்குப் பாதுகாப்பை வழங்கியிருந்தார்கள். ஆனால் தமிழ் நாட்டில் சரி நிலமை மாறி வருகின்றது. எப்பொழுது தமிழ் நாட்டில் மாநில ஆட்சி வந்ததோ அன்றிலிருந்து தமிழ் அழியத்தொடங்கியது என்பது மோசமான ஒரு வரலாற்று உண்மை என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும்'. என்றும் செய்தியல் தரப்பட்டுள்ளது.

இது முற்றிலும் முரண் பட்ட கருத்து. தமிழ் நாட்டில் மாநில ஆட்சி வந்த பின்னரே 'தமி;ழ் நாடு' என்னும் பெயர் வந்தது. எல்லா அறிவித்தல்களும் தமிழில் தரப்பட்டன. தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியன நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. பல பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு தமிழுக்கு பல பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1933ஆம் ஆண்டில் இலங்;கையைச் சேர்ந்த சுவாமி விபுலாநந்தர் மாத்திரம்தான் தமிழ் பேராசிரியர் பதவி வகித்தார். அதுவும் அண்ணாமலைச் செட்டியாரின் அழைப்பின் நிமித்தமே இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இப்பதவியை ஏற்றார். இதன்பின் தமிழ் நாட்டில் பல அறிஞர்கள் தமிழ்ப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றார்கள். சிதம்பரநாத செட்டியார், ரா.பி. சேதுப்பிள்ளை, கா. சுப்பிமணியபிள்ளை, மு.வரதராசன், எஸ். வையாபுரிப் பிள்;ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, அன்பழகன், வெள்ளைவாரணன், ஒளவை நடராஜன், சுப்பு ரெட்டியார், பாலசுப்பிரமணியன், அ.ச.ஞானசம்பந்தன், இளந்திரையன், வைரமுத்து போன்ற பலர் வௌ;வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பதவி வகித்து தமிழ் வளர்த்துள்ளார்கள். மு.வரதாஜன் அவர்கள் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றியபோது பல்கலைக்கழகத்தால் நூற்றுக்கணக்கான அரிய தமிழ் நூல்களை வெளியிட்டு தமிழுக்கு உரமூட்டினார். ஒளவை நடராஜன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றியபோது தமிழியல் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கு உத்வேகம் அளித்தார். உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் தமிழ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றன. நூற்றுக்கணக்கான ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகளளை யெல்லாம் உணர்வோடு உன்னிக் கவனித்தவர்களுக்கும் இந்த நிகழ்வுகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் தமிழ் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் விருத்தி தெட்டத் தெளிவாக விளங்கும்.



இன்று தமிழ் நாட்டில் உள்ள ஒருவர் ஆங்கிலம் பேசும்போது தமிழை இணைத்துப் பேசுகிறார். தமிழ் பேசும்போது ஆங்கிலத்தை இணைத்துப் பேசும் நிலை காணப்படவில்லை'. இந்தக் கூற்றும் பொருளற்றது. இப்படியான ஒரு முடிவை வெளியிடுவதற்கு ஆய்வு அடிப்படையில் ஏற்ற ஆதாரம் வேண்டும். ஒருவர், தமிழ் நாட்டுக்குப் போகாவிட்டாலும் இந்திய தொலைக் காட்சியைப் பார்க்கும்போது, நிகழ்ச்சிகளில் தமிழ் பேசுவர்கள் சில சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்றளைப் பயன்படுத்தவதை அவதானிக்கலாம்.

'ஆங்கிலம் தெரிந்த இரு தமிழர்கள் சந்திக்கின்றபோது முதலாவது அவர்கள் மறக்கின்ற மொழி தமிழாக இருக்கும். ஆங்கிலம் தெரிந்த இரு சிங்களவர்கள் சந்திக்கின்றபோது முதலாவது அவர்கள் மறக்கின்ற மொழி ஆங்கிலமாக இருக்கும்'. இப்படியான ஒரு கூற்றுக்கு ஆய்வு அடிப்படையில் ஆதாரங்கள் வேண்டும். எனது பல சொந்தக்காரர்களும் நண்பர்பளும் நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள். ஆனால் சந்திக்கும்போது தமிழிலேதான் பேசுகிறார்கள். இரு தமிழர்கள் ஆங்கிலத்தில் பேசினால் தமிழை மறந்து விட்டார்கள் என்ற முடிவுக்கு வரலாமா?

இங்ஙனம்

கலாநிதி கோணாமலை கோணேசபிள்ளை, மண்டூர்.
Dr. Konamalai .Konesappillai                                                    
B.ED. Mathematics (1st Class Hons).(Colombo),  Sri Lanka     
M.A., M.Sc., Ed.D.(Columbia University in the City of New York)                                                                                                                         
Certificate in Math Education, (Macquarie University, Australia)                                                      
Former Faculty Member, National and International Universities                                                                      
    
  MANDUR  2
     BATTICALOA
     Sri Lanka    
Phone:   065 306 3369
                065 2056 292
 Mobile: 077 2264 585