மட்டக்களப்பு மாநகரத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் தொடர்ந்துமாக நடைபெற்றுவரும்
வாரமொரு சிரமதானத்தின் ஓரங்கமாக நேற்றையதினம் 05.06.2014 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார்
தலைமையில் பாரியளவிலான சிரமதானப் பணியொன்று இடம்பெற்றது.
இச்சிரமதானப் பணியானது அரசடி நூலகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பார் வீதி, புகையிரத நிலைய சுற்றுவட்டம் ஊடாக மாமாங்கம்
சந்தி வரையான வீதியோரங்கள் மற்றும் பொது இடங்கள் , பிரதான வடிகான்கலென அனைத்தும் இடங்களும்
சிறந்த முறையில் துப்பரவு செய்யப்பட்டதுடன், சட்டவிரோத வீதியோர வியாபாரத்தில்
ஈடுபடும் வியாபாரிகளை தடைசெய்யும் முகமாக அவ்வாறாக இனங்காணப்பட்ட பகுதிகளில் அறிவுறுத்தற்
பலகைகளும் நிறுவப்பட்டது.
இந்நிகழ்வில்
மாநகர சபையின் 200
தொழிலாளர்களும்,
அப்பிரதேச பொது மக்களுமாக இணைந்து செயற்பட்டதுடன், மாநகரத்தின் அபிவிருத்திக்காய்
முன்நின்று செயற்படும் மாநகர ஆணையாளருக்கும் தொழிலாளர்களுக்கும் நிகழ்வில்
கலந்துகொண்ட நகர மக்கள் நன்றியைத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.












