புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கலந்துரையாடல்

நடனம்-
மட்டக்களப்பு சர்வோதய அமைப்பின் தேசோதயசபையின்ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடிபிரதேசசெயலகஒன்றுகூடல் மண்டபத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சேவைபுரியும் சமூர்த்தி மற்றும் பொருளாதார உத்தியோகத்தர்களுக்கான புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு சர்வோதயஅமைப்பின் மாவட்ட இணைப்பாளர் திரு.மதனகுமார்; தலைமையில்; நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்புமாவட்டத்தின் தொற்றாநோய் பிரிவின் வைத்தியஅதிகாரி டா.நவலோஜிதன்,மாவட்டதேசோதயசபையின் தலைவர் எம். வேதாரணியம்  சமூர்த்திமுகாமையாளர்  ஜெயராஜ்; சமூர்த்திமற்றும் பொருளாதாரஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



நிகழ்வின்போது புற்றுநோயின் வகைகள் அதில் வாய்ப்புற்றுநோய்,உணவுவாய்கால் புற்றுநோய்,பெருங்குடல் புற்றுநோய்,மார்பகப் புற்றுநோய்,கருப்பைபுற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் தொடர்பானஅறிகுறிகளும் அவற்றுக்கான வைத்தியஆலோசனைகள் என்ன என்பது சம்மந்தமாக தொற்றாநோய் பிரிவின் வைத்தியஅதிகாரிடா.நவலோஜிதன் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.