வில்லியம் ஓல்ட் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட 1814 இல் ஆரம்பிக்கபட்ட இப்பாடசலை 23 பாராளுமன்ற உறுப்பினர்களையும், 9 மெதடிஸ்த திருச்சபை குருவானவர்களையும் , மருத்தவம், பொறியியல், விவசாயம், கலை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தள்ளது.
இவ்வாறு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 36 ஆவது தற்போது கடமையில் உள்ள அதிபர் ஜே. ஆர். பி, விமலராஜ் தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள இருநாற்றாண்டு விழாவையொட்டி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கு;ம் செயலமர்வு நேற்று (27) மாலை கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரம, கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார, மாவட்ட அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ. நிஸாம் அவர்களும், விசேட அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் அவர்களும் கலந்து கொள்வர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 200 ஆவது ஆண்டு நிறைவு செய்தியை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அருண்தம்பிமுத்து வாசிக்கவுள்ளதோடு மாணவர்களின் நிகழ்வுகளும் இடம்பெறும்.
இதனையொட்டி நேற்று (28) பாடசாலை வளாகத்தை சிரமதானம் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் துப்பரவு செய்தனர்.
அம்பாரை மாவட்டத்தில் உயர் பதவிகளிலுள்ள முஸ்லிம் கல்விமான்களும் உயர் அதிகாரிகளும் இப்பாடசாலையின் பழைய மாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












