(சித்தாண்டி நித்தி) மக்களுக்கு உதவும் மக்களுக்கான மன்றத்தின் 4வது நிறைவு ஆண்டுக்கான சிறுவர்களுக்கான சங்கமம் நிகழ்வு இம்முறையும் பறங்கியாமடு பாரதி வித்தியாலயத்தில் மக்களுக்கு உதவும் மக்களுக்கான மன்ற அமைப்பின் பணிப்பாளர் திரு.வின்சன் பிரான்சிஸ் (ரஞ்சன்-ஜேர்மன்) தலைமையில் இன்று (21.06.2014) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றன.
பாடசாலை அதிபர் திரு.தியாகராஜன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வுக்கு விசேட சிறப்பு அதிதியாக கல்குடா கல்வி வலய பணிப்பாளர் திரு.எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா மற்றும் விசேட அதிதிகளாக கல்குடா கல்விவலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.என்.குணலிங்கம் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர் திரு.ரி.ரவி அத்துடன் பாடசாலைகளின் அதிபர்கள் மக்களுக்கு உதவும் மக்களுக்கான மன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பெற்றார்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது அதிதிகள் மாணவர்களினால் வரவேற்க்கப்பட்டதுடன் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் அனைத்தும் ஆரம்பமாகின. இலங்கையின் 24 இடங்களில் தங்களின் சேவையை வழங்கி வரும் மக்களுக்கு உதவும் மக்களுக்கான மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் நடனம், கூத்து, நாடகம் என பல நிகழ்வுகள் வருகை தந்த மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்வுக்கு இன மத பேதமின்றி நாட்டின் கொழும்பு, மன்னார், பொலனறுவை, மட்டக்களப்பு அனைத்து பகுதி மாணவர்கள் மற்றும் புத்தளம் என பல மாவட்டங்களில் இருந்து சிங்கள பாடசாலை மாணவர்கள் முஸ்லிம் பாடசாலை மாணவர்கள், தமிழ் பாடசாலை மாணவர்கள் என கலந்துகொண்டு இன ஒற்றுமையுடன் நடைபெற்ற அனைத்து விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். விளையாட்டுக்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வருகைதந்த அதிதிகளினால் பரிசுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.


.jpg)
.jpg)
.jpg)































