கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாக மைதானத்தில் மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.எம் நிஸாம் தலைமையில் நேற்றுக் காலை கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிஆரம்பமானது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இதன்போது, கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக, வயலக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்வி அதிதிகள் இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டுள்ளதையும் ஆரம்ப நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.












