மட்டக்களப்பு பாலமீன்மடு- திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய மஹா கும்பாபிஷேக கிரியைகள் - போட்டோ

(சதீஸ்)
மட்டக்களப்பு பாலமீன்மடு- திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலய  புனராவர்த்தன ப்ரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 30.06.2014ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

இவ் ஆலயம் இற்றைக்கு 50,60 வருடங்களுக்குமுன் வணக்கத்திற்குரிய நல்லதம்பி சடையப்பசுவாமிகள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு அடியார்களுக்கு அருள்வழங்கிக்கொண்டிருக்கும் பாலமீன்மடு- திராய்மடு வில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயமே இதுவாகும்.

இக் கிரியைகள் கிரியாலங்காரமணி, ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.த.ரவீந்திரராசா குகுக்கள் தலைமையிலான குருமார்களினால் நடாத்தப்படுகின்றது.

பெருமானின் கும்பாவிஷேககிரியைகள் கடந்த 26 ம் திகதி ஆரம்பமானது. ஆரம்ப கிரியைகள் கடந்த நாட்களில் மிக சிறப்பாக இடம்பெற்றது.