பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மது மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புளியந்தீவு வலய சமுர்த்தி சங்கங்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் மட்டக்களப்பு பான்சாலை சந்தியிலிருந்து ஆரம்பமாகி நகர காந்தி சதுக்கத்தை வந்தடைந்தது.
சமுர்த்தி வலய முகாமையாளர் கே. நவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. கணேசமூர்த்தி, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா, மாவட்ட இணைப்பாளர் ஜே. எப். மனோகிதராஜா, சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.












