பட்டிருப்பு வுளுடயமன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் விளையாட்டு விழாவின் இன்றைய நிகழ்வுகள்


(Ravindramoorthy)
இன்று (22.06.2014) காலை 7.30 மணிக்கு விஜேய் கொம்பையின் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடந்தேறிய மரதன் ஓட்டப் போட்டியில் பழுகாமத்தைச் சேர்ந்த ம.லோகிகன் 1ம் இடத்தைத் தட்டிக்கொண்டார். 2ம் இடத்தை செட்டிபாளையத்தைச் சேர்ந்த ரி.ராகவனும், 3ம் இடத்தை வெல்லாவெளியைச் சேர்ந்த ஐ.சகரூபனும் தட்டிக் கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து காலஞ்சென்ற குஞ்சித்தம்பி அவர்களின் ஞாபகார்த்தமாக பட்டிருப்பு வாவியில் நடைபெற்ற இருவர் கொண்ட தோணி ஓட்டப் போட்டியில் மாங்காட்டைச் சேர்ந்த பூ.தவராசா இ.பெரியவன் ஆகியோர் 1ம் இடத்தினையும் செட்டிபாளையத்தைச் சேர்ந்த அ.மகேந்திரன் கு. அச்சுதானந்தம் ஆகியோர் 2ம் இடத்தினையும் பட்டிருப்பைச் சேர்ந்த ம.ரதிக்குமார் வி.நக்கீரன் ஆகியோர் 3ம் இடத்தினையும் தட்டிக் கொண்டனர்.

நாளை பி.ப 2.00 மணிக்கு சுவட்டு மைதான நிகழ்வுகளும், மாலை 6.00 மணி முதல் 'அனுவின் சப்தஸ்வரங்கள்' இசை நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதனை எமது இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.