கடல்மட்ட உயர்வுக்கு எதிராக குரல்கொடுங்கல்......(!!)

(சித்தாண்டி நித்தி) கடந்த தசாப்தங்களாக உலகம் முழுவதிலும் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் எதிர்மறையான மாற்றங்கள் மற்றும் பாதகங்கள் காரணமாகவே சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று உலக நாடுகள் கவனம் செலுத்திவருகின்றது. 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுசபையினால் உலக சுற்றுசூழல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. முதல் முறையாக 1973ஆம் ஆண்டு அனுஸ்டிக்கப்பட்ட இந்த தினம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு தொனிப்பொளில் வருடாந்தம் யூன் மாதம் 5ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. பூமி மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் சாதகமான சூழல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தூண்டுவதுமே உலக சுற்றுசூழல் நிகழ்வுகளின் முக்கியமான நோக்கங்களாக அமைந்துள்ளன. 


ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக கூற்றுச்சூழல் தினத்திற்கான பிரதான நிகழ்வு இம்முறை பாவநோசில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'கடல்மட்ட உயர்வுக்கு எதிராக குரல்கொடுங்கல்' என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை உலக சுற்றுப்புற சூழல் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மனிதனுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஓசோன் படலத்தை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும். மரங்களை நாட்டுவதன் மூலம் வளிமண்டலத்தில் காபனீரொட்சை அளவைக்குறைத்து பூமியை எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக மாற்ற நம்மால் முடியும் என்பது நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்றவேண்டிய காலம் இது. இன்று சுற்றுப்புற சூழல் மாசடைவதால் பல்வேறுபட்ட நோய்களுக்கு மனிதன் தனது வாழ்க்கையை இடையில்  முடித்துக்கொள்கின்றான் இவ்வாறான ஒரு நிலைமை எமது எதிர்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்பதற்காக இன்றிலிருந்தே சுற்றுப்புற சூழலை பாதுகாப்பாக பேணுங்கள்.