சித்தாண்டியில் ஏறாவூர்பற்று பிரதே செயலகத்தினால் நடைபெற்ற நடமாடும் சேவை

(நித்தி) 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' கிராமம் கிராமமாக வீடுவீடாக தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்-2014 மக்களை வலுவூட்டும் நடமாடும் சேவை சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற நடமாடும் சேவையில் சித்தாண்டி i,ii,iii,iv மற்றும் மாவடிவேம்பு i,ii பிரிவுகளை உள்ளடக்கி  நடைபெற்ற சேவையில் சுமார் 600 மேற்பட்ட பொதுமக்கள் வருகைதந்திருந்தனர். இதன்போது தென்னை பயிர்செய்கை பகுதி, பதிவாளர் பகுதி, ஆயுள்வேத பகுதி, கால்நடை பகுதி, பொலிஸ் திணைக்களம், தேசிய அடையாளட்டை பகுதி, காணி பகுதி, பெண்கள் அபிவிருத்தி பகுதி, என பிரதேச செயலகத்தில் இயங்கும் அனைத்து பகுதிகளும் வருகைதந்து பொதுமக்களுக்குரிய சேவைகளை வழங்கின.

நடமாடும் சேவைகள் ஊடாக  28  காலம் கடந்த மற்றும் புதிய இலவச திருமணப்பதிவுகள் வழங்கப்பட்டதுடன் பாடசாலை செல்வதற்கு பாத அணிகள் இல்லாத வறிய மாணவர்களுக்கு பாதணிகள் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்ககளினால் வழங்கிவைக்கப்பட்டன.