கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'மாணவர் மையக்கல்வி தொடர்பான' கருத்தரங்கு செயலமர்வு

(சித்தாண்டி நித்தி) உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு தற்பொழுது அமுல்படுத்தியுள்ள மாணவர் மையக்கல்வி தொடர்பான கருத்தரங்கு செயலமர்வு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா  அவர்களின் வழிகாட்டலின்கீழ் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் பல்கலைக்கழக கலை கலாசாரா பீடாதிபதி கலாநிதி திரு.ராஜேந்திரம் தலைமையில் (05.06.2014) நடைபெற்றது. 

ஆரம்ப கருத்தரங்கு செயலமர்வின்போது 40 மேற்பட்ட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். பல்கலைக்கழக மாணவர் மையக்கல்வி தொடர்பான கருத்தரங்கு செயலமர்வின்போது அதுதொடர்பாக சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எம்.ரவி அவர்களினால் விரிவுரைகள் மற்றும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மாணவர் மையக்கல்வி தொடர்பான கருத்தரங்கு செயலமர்வு தொடர்ச்சியாக விரிவுரையாளர்களை உள்ளடக்கியதாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என கலை கலாசாரா பீடாதிபதி கலாநிதி திரு.ராஜேந்திரம் தெரிவித்தார்.