சித்தாண்டி–மாவடிவேம்பு பத்திர காளி அம்பாள் ஆலய உற்வம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்

(நித்தி) சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திர காளி அம்பாள் ஆலய 51வது வருடாந்த உற்சவம் இன்று (21.06.2014) உதயன்மூலை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து மடைப்பெட்டி எடுத்து கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் திரு கதவு திறத்தலுடன் ஆலயத்தின் இவ்வருட பூசைகள் ஆரம்பமாகின. 

 ஸ்ரீ பத்திர காளி அம்பாள் ஆலயத்தின் உற்சவமானது 7 நாட்களை கொண்டதாகவும் எதிர்வரும் 27.06.2014 திகதி காலையில் தீ மிதிப்புடன் அம்பாளின் இவ்வருட உற்சவம் அனைத்தும் நிறைவடையவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.