பட்டிருப்பு வுளுடயமன் விளையாட்டுக் கழகத்தின் 28வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழாவும் இன்னிசை இரவும் கழகத் தலைவர் சு.நித்தியானந்தராசா தலைமையில் இன்று 21 ஆந் திகதி தொடக்கம் 2014.06.23 ஆந் திகதி திங்கட்கிழமை வரை நடைபெறவுள்ளது.
காலஞ்சென்ற கழக போசகர் மா.பரமானந்தராசா அவர்களின் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட சக்கிள் ஓட்டம் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இச் சக்கிள் ஓட்டப் போட்டியில் 1ம் இடத்தை மட்டக்களப்பு மாமாங்கத்தைச் சேர்ந்த லு. சுரேஷ்ராஜ் தட்டிக் கொண்டார். 2ம் இடத்தை மட்டக்களப்பு புன்னச்சோலை குமரபுரத்தைச் சேர்ந்த எ. சுதர்சனும் 3ம் இடத்தை மட்டக்களப்பு கூழாவடி 7ம் குறுக்கைச் சேர்ந்த லினஸ்டன் ராகலும் தட்டிக் கொண்டனர்.
நாளை காலை 6.30 மணிக்கு மரதன் ஓட்டமும், காலை 10.00 மணிக்கு பட்டிருப்பு வாவியில் தோணி ஓட்டமும் நடைபெறவுள்ளது.
23 ஆந் திகதி திங்கட்கிழமை பி.ப 2.00 மணி தொடக்கம் சுவட்டு மைதான விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொள்ளவுள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு கிழக்கிலங்கை புகழ் 'அனுவின் சப்தஸ்வரங்கள்' இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
சுவட்டு மைதான விளையாட்டுப் போட்டிகளையும், இசை நிகழ்வினையும் எமது வெற்றிநியூஸ் இணையத் தளத்தில் நேரடியாகப் பார்வையிடலாம்.

















