வவுணதீவு பிரதேசத்தில் சிறுவர் உழைப்பிற்கு எதிரான விழிப்புணர்வு திட்டம்

(சதீஸ்)
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையில் சிறுவர் உழைப்பிற்கு எதிரான தேசிய தினத்தையொட்டி வவுணதீவு பிரதேசத்தில் விழிப்புணர்வு செயற்றிட்டம் கடந்த 9ம் திகதி தொடக்கம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டம் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இவ் விழிப்புணர்வு திட்டம் வவுணதீவு, ஆயித்தியமலை கிராமங்களிலும் ​நேற்றயதினம்  நாவற்காடு கிராமத்திலும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மல்ராஜ், கிராம உத்தியோகத்தர்கள்,பொலீஸ் உத்தியொகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சிறுவர்களை  பாதுகாப்போம், சிறுவர்களுக்கு அவர்களது உரிமைகளை வழங்குவோம், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே போன்ற விடயங்கள் பற்றியும் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் உத்தியோகத்தர்களால் ஒலிபரப்பி மூலம் தெரிவிக்கப்பட்டது.