(சித்தாண்டி நித்தி) உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர் கல்வியும், நூலகத்தின் பங்களிப்பும் எனும் கருப்பொருளில் செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் திருமதி. யாகேஸ்வரி. வசந்தகுமாரன் தலைமையில் விபுலானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது விசேட அதிதிகளாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட நூலகரும், நூலக, தகவல் விஞ்ஞான விரிவுரையாளருமான திரு.டபிளியு.ஜெ.ஜெயராஜ், செட்டிபாளையம் மகா வித்தியாலய அதிபர், திரு. த. அருள்ராஜா, களுதாவளை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பி.சுரேஸ் ரொபட், களுவாஞ்சிக்குடி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. ம.புவிதரன், களுவாஞ்சிக்குடி, மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. க.பகீரதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு சிறப்புரையாற்றிய கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ட நூலகரும் நூலக தகவல் விஞ்ஞான விரிவுரையாளருமான திரு. டபிளியு.ஜெ.ஜெயராஜ் தனதுரையில், உலகமயமாதலின் விளைவாக இன்றைய சமூகநிலை மாற்றமடைந்திருப்பதாகவும், அதற்கேற்ற வீரியத்துடன் சமகாலப் பரம்பரையினர் புடமிடப்படவேண்டியது அவசியமெனக் குறிப்பிட்டதுடன், சமூகத்தின் தகவல் தேட்டத்திற்கேற்ப வௌ;வேறான வடிவங்களில் நூலகங்களினால் தகவல் வளங்கள் தாராளமாக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இ;வ்வளங்களை எமது மாணவர்கள் சீர்ப்பட உபயோகப்படுத்துவதற்கான பொறிமுறைகளைப் பெற்றோரும், ஆசிரியர்களும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமெனக் குறிப்பிட்டார்.
விசேட அதிதியான களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம் தனதுரையில், ஆங்கிலக் கல்வியின் அவசியம் பற்றியும், இக்காலச் சிறுவர்களின் எதிர்கால இருப்புக்கான ஓர் அடித்தளத்தை பாடசாலைகளும், பெற்றோரும் வழங்கவேண்டுமெனவும், உயர் அதிகாரிகளாய் எதிர்காலத்தில் நம் சிறுவர்கள் உருவாக்கப்படவேண்டுமானால் வௌ;வேறான பாடத்துறைகளையும் தேவைப்பாடறிந்து மாணவர் தெரிவு செய்து கற்க வாய்ப்பேற்படுத்தப்படவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.கே.சித்திரவேல் தனதுரையில் நூலகங்கள் குறித்த விழிப்புணர்வினைப் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு ஊட்டவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், பிறந்தநாள் விழாக்களின்போது நூல்கள் பரிசுப்பொதிகளாக வழங்கும் பழக்கத்தைக் கொண்டுவருவதன்மூலமும் ஒவ்வொரு பிள்ளைகளையும் கல்வியறிவின்பால் தக்கவைக்கமுடியுமெனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின்போது 2013ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்களும் வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் 2014ஆம் ஆண்டில் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான ஓர் முன்னோடிப்பரீட்சை நடாத்தப்பட்டதுடன், பரீட்சை முடிவின்போது திரு.வே.திவாகரன் அவர்களினால் வருகைதந்த மாணவர்களுக்கு ஓர் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)










