(சதீஸ்)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாவி மற்றும் நிலத்தின் வளம் பேணும் நோக்குடன் சுற்றாடல் தின விழிப்பூட்டல் செயற்றிட்டம் மட்டக்களப்பு கல்வி வலயமும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையும் இணைந்து கடந்த வியாழக்கிழமை 5ஆம் திகதி செயற்படுத்தியது.
இந் நிகழ்வு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சுற்றாடல் வலய ஆணையாளர் துரைராசசிங்கம் ஞானசேகரன், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி ரஜனி பாஸ்கரன் ஆகியோர் இச் செயற்றிட்டத்தினை ஒருங்கிணைத்து ஏற்பாடுசெய்திருந்தனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும், இதன்போது வாவிக்கரையோரங்களில் திண்மக் கழிவகற்றல் பணியும், 'கடல் மட்டம் உயராமல் இருக்க ஒன்றுபடுவோம், சுற்றாடல் பாதுகாப்பு' போன்ற கருத்திற்கமைய பாலமீன்மடு தகவல்மைய மண்டபத்தில் கிழக்கு பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியர் பீ.வினோபாவா அவர்களினால் விழிப்பூட்டல் செயலமர்வும் இடம்பெற்றது.
இச் செயற்றிட்டத்தில் மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள நான்கு பாடசாலையைச் உள்ளடக்கி சுற்றாடல் முன்னோடிக் குழுவைச் சேர்ந்த 50 மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் கலந்துகொண்டதுடன் மேலும் இந் நிகழ்வில் மீனவர்கள், இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












