நடனம் -மட்டக்களப்பு துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் அடியார்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
கண்ணகியம்மன் ஆலய திருச்சடங்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை ஊர்வலம் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை கன்னிக்கால் வெட்டும் நிகழ்வும் திங்கட்கிழமை திருக்குளிர்த்தியும் இடம்பெறவுள்ளது.
அடியார்கள் தீச்சட்டி,பால்காவடி,முள்ளுக்காவடி,தூக்குக்காவடி என்பன தில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்த மாரியம்மன் ஆலயம் சித்திவிநாயகர் ஆலயங்களுக்குச் சென்று கண்ணகியம்மன் ஆலயத்தினை அடைகின்றது.அதேவேளை இவ்வருடம் என்றுமில்லாத வாறு வீதிகளும் ஆலயமும் சோடனை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இளைஞர் அமைப்பினரால் தாக சாந்தி நிலையம் அமைத்து செவையினை மேற்கொண்டு வருகின்றனர். நிகழ்வினை துறைநீலாவணை இளைஞர் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.


.jpg)
.jpg)











