மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்
பற்று தெற்கு, கிரான் பிரதேச
செயலாளர் பிரிவில் விவசாயம் மற்றும் சிறு கைத்தொழில்
நடவடிக்கையில் ஈடுபடுவோரின் தொழில் முயற்சியை மேலும்
வளப்படுத்தும் முகமாக, ஒரு தொகுதி
கைத்தொழில் உபகரணங்களை மீள் குடியேற்ற பிரதி
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கி
வைத்தார்.
கிரான் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.தனபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன்.இரவிந்திரன், திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இதன்போது 25 விவசாயிகளுக்கான விவசாய உபகரணங்களும் 25 தச்சுதொழில் புரிவோருக்கான தச்சு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.