கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலயத்தில் 'பெரிய புராணம் கூறும் தனயனின் உயிரீந்த திருத்தொண்டா” வடமோடி புராணக்கூத்து.



(மா.சசி)
கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்குற்சவத்தின் 5ஆம் நாள் பூசையை சிறப்பிக்கும் முகமாக பெரிய புராணம் கூறும் தனயனின் உயிரீந்த திருத்தொண்டர்' வடமோடி புராணக்கூத்து நேற்று வியாளக் கிழமை இரவு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
சிவன் வைரவராக மாறு வேடம் பூண்டு திருத்தொண்டரிடம் 5 வயது நிரம்பிய ஆண் தலைப்பிள்ளையை வெட்டி கறிசமைத்து உணவு வழங்குமாறு கேட்டபோது திருத்தொண்டரும் அவரது மனைவி திருவெண்காட்டுநங்கையும் தங்களது மூத்த மகனான சீராளதேவனை கழுத்தால் அறுத்து கறிசமைத்து உணவு கொடுத்ததை அடுத்து சிவனால் சீராளதேவன் மீண்டும் உயிர்ப்பித்த சரித்திரக் கதையே இக் கூத்தின் கதையாகும்.
கன்னன்குடா கூத்துக் கலைஞர்களினால் அடப்பட்ட இக் கூத்தானது 1974 ஆம் ஆண்டு ஆடப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது 1974 ஆம் ஆண்டு ஆடிய பழைய கலைஞர்களையும் புதிய கலைஞர்களையும் கொண்டே இக் கூத்து ஆடப்பட்டுள்ளது.