புனித மிக்கேல் கல்லூரி மாணவன் ஆதுரியன் தமிழ் மொழித்தின பேச்சுப் போட்டியில் முதலாம் இடம்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 5 இல் கல்வி கற்கும் செல்வன் சுந்தரராஜன் ஆதுரியன், 2014ம் ஆண்டிற்கான தமிழ் மொழித்தினப் போட்டி பிரிவு 1ற்கான பேச்சுப் போட்டியில் மாகாண மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் வலய, மாவட்ட மட்டங்களில் 1ம் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் செங்கலடி சுந்தரராஜன் தர்ஸினி தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற ஓய்வு பெற்ற சமாதான நீதவான்
அ. தம்பாப்பிள்ளை அவர்களின் பேரனும் ஆவார்