கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு செலான் வங்கியின் அனுசரணையில் 100 லீற்றர் பெயின்ட் கையளிப்பு


(தில்லை)
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு செலான் வங்கியின் அனுசரணையில் 100 லீற்றர் வர்ணத்தீந்தைகளை அன்பளிப்புச்செய்யும் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
முரளீஸ்வரன் தலமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 
இந்நிகழ்விற்கு செலான் வங்கியின் முகாமையாளர் பிராந்திய முகாமையாளர் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்கள் தாதிமார்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கழந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் உரையாற்றுகையில்.
முழுக்க முழுக்க அரசாங்கத்தின் நிதியுதவியினை மாத்திரம் நம்பியிருந்தால் ஒருவைத்தியசாலை பூரண அபிவிருத்தியை காணமுடியாது. மாறாக அதற்கு சமூகம் சார்ந்த அமைப்புக்களும் ஏனைய நிதி நிறுவனங்களும் நேசக்கரம் நீட்டுவதன் மூலமே ஒரு நிறுவனம் முழு அபிவிருத்தியினையும் காணமுடியும்.

ஆதனடிப்படையிலேதான் கல்முனையில் இருக்கும் செலான் வங்கி நிறுவனமானது எமது வைத்தியசாலையின் தேவை கருதி சிறுவர் விடுதிக்கும் மற்றும் ஏனைய விடுதிகளுக்கும் நிறம் பூசுவதற்காகவேண்டி 100 லீற்றர் வர்ணத்தீந்தைகளை தந்து உதவியிருக்கின்றது.

ஆதன் மூலம் எமது தேவையின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது அதனை இட்டு அந்த நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் எமது வைத்தியசாலை சார்பாக நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாரான தேவைகளை ஏனைய சமூக நிறுவனங்களும் அமைப்புக்களும் எமது வைத்தியசாலைக்கு தங்கலாளான உதவிகளை செய்ய முன்வரும் பட்சத்தில் வைத்தியசாலையின் தேவைகள் அனைத்தும் ஓரளவு பூர்த்தியடைந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை புதுப்பொழிவுடன் காட்சியளித்து மக்களுக்கான அனைத்து தேவைகளையும் வழங்கும் எனவும் கூறினார்.