கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் சுவாமி விபுலானந்தரின் 18வது நினைவுப் பேருரை

  (சித்தாண்டி நித்தி, டினேஸ்,செங்கலடி.) கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் சுவாமி விபுலானந்தரின் 18வது நினைவுப் பேருரை எதிர்வரும் 18.07.2014 (வெள்ளிக்கழமை) காலை மணிக்கு கிழக்கு பல்கலைக்கழக அரங்கில் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசாரா பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம் தலைமையில் நடைபெறவிருக்கின்றது. 

நடைபெறவிருக்கும் சுவாமி விபுலானந்தர் 18வது நினைவுப்பேருரை நிகழ்விற்கு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளர். 

நினைவுப்பேருரையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து வருகைதரும் சைவசித்தாந்த மெய்யியலில் உளவியல் அம்சங்கள் போரசிரியர்.நா.ஞனாகுமாரன் நிகழ்த்தவுள்ளார். 

இந்நிகழ்வின் வரவேற்புரை கிழக்கு பல்கலைக்கழக பிள்ளை நலத்துறை, கல்வி சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர்.மா.செல்வராசா அவர்களும் நன்றியுரையை ஒப்பீட்டுச் சமய சமூக நல்லுறவுக் கற்கைகள் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.இ.சகாயசீலன் நிகழ்த்தவுள்ளனர்.