(உ.உதயகாந்த்)
மட் / இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், 2014 / 2015 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவும் எதிர்வரும் 13.07.2014 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் வ.பஞ்சலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இப் பொதுக்கூட்டத்திற்கு சகல பழைய மாணவர் சங்க உறுப்பினர்களையும், புதிதாக இணையவிரும்பும் பழைய மாணவர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் பாடசாலையின் அபிவிருத்தி பணிகளிலும் அனைத்து பழைய மாணவர்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் அழைப்புவிடுக்கின்றனர்.













