(சித்தாண்டி நித்தி) கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 29வது வருடாந்த பொதுகூட்டமானது ஊழியர் சங்கத்தலைவர் இரா.இராஜசேகரம் தலைமையில் இம்முறை கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 16.07.2014ம் திகதி காலை 10.00 மணிக்கு சுப நிகழ்வுகளுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெவுள்ளது. நடைபெறவிருக்கும் ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தில் அமர்வுகள்-1, அமர்வுகள்-2 என இரண்டாக பிரிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றது.
கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க 29வது பொதுக்கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் கௌரவ அதிதிகளாக திருமலை வளாக முதல்வர் கலாநிதி நா.வர்ணகுலேந்திரன், சு.வி.அ.க. நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், சிறப்பு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், பதிவாளர் திரு.க.மகேசன் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நடைபெறவிருக்கும் கூட்ட அமர்வுகளின்போது கடந்த வருட பொதுக்கூட்டதொடர் அறிக்கைகள் சமர்ப்பித்தல், நடப்பாண்டிக்கான புதிய நிருவாகத் குழுத்தெரிவு, மற்றும் உப குழுக்கள் தெரிவு என பிற நிகழ்வுகளும் நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












