(நித்தி) கிழக்கு மண்ணில் தமிழர்களின் கல்விக் கண்ணை திறந்துவைத்த ஆசான் அமரர் வல்லிபுரம் நல்லையா அவர்களாவார். அவரால் 1945-07-02 அன்று வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாயலம் உத்தியோகபுர்வமாக ஆரம்பிக்கப்பட்டமையை நினைவுகூரும் நிகழ்வுகள் இன்று சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் நல்லைய மண்டபத்தில் நடைபெற்றன.
இந்நிகழ்வின்போது பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள அமரர் நல்லையா அவர்களின் உருவச் சிலைக்கு பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி மற்றும் அசிரியர்கள், மாணவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதும் தாபகர் கீதம் பாடப்பட்டது. 'நல்லையா 'கண்கண்டதெய்வம்' எனும் தலைப்பில் பாடசாலையின் உரையாற்றினார். அதிபர் தனது உரையின்போது அமரர் நல்லையா தனது சிறுபராயம் முதல் இறுதியில் தனது சகோதரியார் வீட்டிலிருந்தவாறு நிம்மதியாக இறைவனடி சேர்ந்தமைவரை அவர் ஆற்றிய பொதுப்பணிகளைவியந்துபேசினார். அவரதுபாதையில் மாணவர்கள் செல்வதே இன்றையதேவையாகுமெனவும் கூறினார். மேலும் பிரதி அதிபர் திருமதி.ம.சுந்தரலிங்கம் உள்ளிட்ட அசிரியர்களும் மாணவதலைவர்களும் ஞாபகார்த்த உரை நிகழ்த்தினர்.
இவ்வருட பாடசாலை தினத்தையொட்டி மாணவர்களது பங்களிப்புடன் மாணவ தலைவர்களது ஏற்பாட்டில் புதியவிதத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் நலிவுற்ற சிறார்களின் நல்ல எண்ண அக்கறையாக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இருதய சத்திர சிகிச்சையை எதிர் கொண்டுள்ள சிங்காரத் தோப்பு சரஸ்வதி வித்தியாலய தரம்-5 மாணவன் ரஜீவன் என்பவரது நலன் கருதி நல்லையா மண்டபத்தில் வைத்து ஒரு தொகை நிதி உதவி வழங்கப்பட்டதுடன் சித்தாண்டி யோக சுவாமிகள் மகளிர் இல்லம் மற்றும் மாவடிவேம்பு மரியநாயகம் மகளிர் இல்லம் ஆகியவற்றுக்கு சென்று தலா ஒரு தொகுதி உலருணவுப் பொருட்களும் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டன.
சிரேஷ்ட மாணவ தலைவன் ம.சுலக்சன் மற்றும் சிரேஷ்ட மாணவ தலைவி ப.ஹிசாநிதி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வுகள் அனைவரதுமனதையும் நெகிழச் செய்வதாகபயனடைந்த இல்லப் பொறுப்பாளர்களும் மாணவன் ரஜீவனின் தாயாரும் தெரிவித்ததும் குறிப்பித்தக்கது.



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)












