உணவு விசமானதால் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 8 மாணவர்கள் இன்று புதன்கிழமை மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ரி.தவனேநசன் தெரிவித்தார்.
இச் சம்பவம் உணவு நஞ்சானதால் ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து வருகின்றோம். ஏன அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களிடம் கேட்டபோது வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே உட்கொண்டோம். ஆனால் நாங்கள் தண்ணீரை குடித்தததன் பின்னரே மயக்கமும் வாந்தியும் வந்ததாக தெரிவித்தனர்.
கொக்கடிச்சோலை பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.












