பெறுமதிமிக்க உயிர்களையும் சொத்துக்களையும் அழித்தொழித்த கோர இன வெறியாட்டம் பொது பல சேனாவின் செயலாளர் அத்தே ஞானசார தேரருக்கு எவ்வாறு சிறிய விடயமானது? என கேள்வி எழுப்பியுள்ளார் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி ,நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் ,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் உதுமாலெப்பை.
சகவாழ்வை விரும்பும் இந்நாட்டு மக்களை குழப்பும் பொதுபல சேனாவின் முக்கிஸ்தர்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்படும் உண்மைக்குப் புறப்பான வெற்றுப் பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவிக்கையிலே அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு இனத்தவரும் அவர்களுக்குரிய தனித்துவத்துடன் ஏனைய இன மக்களுடன் சக வாழ்வை வாழவே விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்டில் வாழுகின்ற மக்களை சகவாழ்வுடன் வாழ விடக்; கூடாது என்ற நோக்கத்துடன் செயற்படும் பொது பல சேனாவினர், தொடர்ச்சியாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான பொய்யான பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாகப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வினவாதப் பிரச்சாரங்கள் வடக்கு, கிழக்கிற்கு வெளியே சிங்கள மக்கள் மத்தியில் சிதறி வாழும் முஸ்லிம்களுக்குகெதிராக அப்பாவி சிங்கள மக்களை தூண்டிவிட்டு இனவாதிகளின் இலக்குகளை அடைவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட செயற்பாடுகளாகும்.
அவர்களின் இலக்கை அவர்கள் இலகுவாக அடைந்து கொள்வதற்கு நாம் காரணமாக மாறிவிடக் கூடாது. இவ்விடத்தில் முஸ்லிம்கள் பொறுமைகாக்க வேண்டிதொரு நிலையில் உள்ளோம். நாம் பொறுமையிழந்து செயற்படும்போது அது நமது சமூகத்திற்கே பாரிய அழிவை ஏற்படுத்தும். அந்த அழிவைத்தான் அவர்கள் அளுத்தகமையில் அரங்கேற்றி வைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவி;டக் கூடாது.
அப்பாவி சிங்கள இளைஞர்களை ஒன்றுதிரட்டி, அவர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களைத் தூவி, ஆர்ப்;பாட்டம் என்ற போர்வையில் தர்ஹா நகரிலும,; அளுத்கமையிலும், பேருவளையிலும் கோர இன வெறியாட்டம் அரங்கேர வைத்தவர் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்பதை இந்தநாடு மாத்திரமல்ல முழு உலகமே அறியும.; பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டியவர்கள் தங்களுக்கும் இந்ந இன வெறியாட்டத்திற்கும் தொடர்பில்லை என்று கூறுவது பூனை கண்ணை முடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்ற கதையாக இருக்கிறது.
சிறிய பிரச்சினையை முஸ்லிம்கள் சர்வதேச மயப்படுத்தி விட்டனர் என்று கூறும் ஞானசார தேரர,; அந்த நிலை உருவாதற்கு யார் காரணம் என்பதை மறந்துவிட்டார்;. பெறுமதிமிக்க உயிர்கள் பல கொள்ளப்படவும்;, வீடுகளும் வர்த்தக நிலையங்களும் எரிக்கப்படவும,; கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப்படவும், பொருளாதாரம் முடக்கப்படவும் காரணமாக விருந்த இந்த இனவெறியாட்டத்தை எவ்வாறு சிறிய பிரச்சினையெனக் கூற முடியுமென கேட்கின்றேன்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களை பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் பொது பல சேனாவினர், முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்தையும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து கழற்றி விடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்;. இதற்காக, சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியிலான பல்லாண்டுகால சகவாழ்வுடனான நல்லுறவை சிதைப்பதற்காக, சிங்கள மக்கள் மத்தியில் விசமத்தனமாக இனவாதப் பிரச்சாரங்களை நாகரியமற்ற முறையில் மேற்கொண்டு, முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களை கட்டவிழ்த்து முஸ்லிம்களின் மனங்களைப் புன்படுத்தி வருகின்றனர்.
பொதுபல சேனாவினரும் அவர்களோடு சார்ந்தவர்களும் புரியும் அட்டகாசங்களை, இன அழிப்புக்கான செயற்பாடுகளை முஸ்லிம்கள் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. அதை நவீன தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றங்களே சர்வதேசத்திற்குக் கொண்டு செல்கின்றன. ஏனெனில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரவிச் செல்லும் இக்காலம் இது என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் குற்றம் இழைத்தவர்களும், குற்றமிழைக்கத் தூண்டியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்திற்குள் சிக்காது அவர்கள் மறைந்திருந்தாலும், சட்டம் அவர்களைத் தண்டிக்கவில்லையென்றாலும் அநீதி இழைக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனைகளின் காரணமாக ; இறைவனின் தண்டனை அவர்களை வந்தடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
இலங்கையில் மாத்திரமல்ல, உலக நாடுகளிலும் கூட வன்முறைகளையும் கோர அழிவுகளையும் புரிந்து, அப்பாவி மக்களினது உயிருக்கும் உடைமைகளும் உலை வைத்து, அவர்களின் உள்ளங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியவர்களை இறைவனின் நீதி எவ்வாறு தண்டித்தது என்பதை வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் புரிந்துகொள்ள முடியுமென அநீதி இழைக்கும் பொது பல சேனா போன்றவர்களிடம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதமோ, மதவாதமோ எங்குமில்லை. அதனைப் பாதுகாப்புத் தரப்பே உறுதிப்படுத்தியுள்ளது. வறுமை நிலையிலுள்ள மக்களுக்கும், தேவை நாடியிருக்கும் பயனாளிகளுக்கும் உதவுவதற்காகவே முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சமூக அமைப்புக்கள் உள்ளன. இந்நாட்டிலுள்ள எல்லா சமூகத்திலும் அந்தச் சமூகங்களுக்கு உதவுவதற்காக சமூக அமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
முஸ்லிம் சமூகத்திலுள்ள சமூக அமைப்புக்கள் மற்றும் ஆண்மீக அமைப்புக்கள் மதவாதத்தையோ, அடிப்படைவாதத்தையோ, தீவிர வாதத்தையோ வளர்க்கவில்லை. அவ்வாறு வளர்ததற்கான எவ்வித ஆதாரங்களுமில்லை. அவ்வாறு இவற்றை வளர்ப்பதற்கான எவ்வித தேவையும் இத்தகைய அமைப்புக்களுக்கு இல்லை. இவ்வாறான நிலையில், தர்ஹா நகர் தீவிரவாதத்தின் மையப் பகுதியென ஞானசார தேரர் குறிப்பிடுவது உண்மைக்குப்புறப்பான கட்டுக்கதையாகும். இதைப் பெரும்பான்மை மக்கள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
இலங்கையின் எந்தப் பிரதேசத்திலும் தீவிரவாதம் இல்லை என்று பாதுகாப்புத்தரப்பு உறுதிப்படுத்தும்போது, பொது பல சேனாவின் செயலாளர் எவ்வாறு தர்ஹா நகர் தீவிரவாதத்தின் மையப்பகுதியெனக் கூறமுடியுமென கேட்கின்றேன்.
சுதந்திர நாட்டில் எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்தக் கருத்து மற்றுமொருவரையோ அல்லது ஒரு இனத்தையோ பாதிக்குமாயின் அது சுதந்திரத்தை மீறியதாகவே அமையும்.
பொது பல சேனாவினரின் கருத்துச் சுதந்திரம் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தை வெகுவாகப் பாதித்து வருகிறது. பெரும்பான்மை சமூகத்திலுள்ள இச்சிறுகுழுக்களினால் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் இத்தகைய ஆதாமற்ற கருத்துக்கள் இனமுரண்பாடுகளையும், இனங்களுக்கிடையிலான சந்தேகப்பார்வையையும் தோற்றுவிப்பதோடு சமாதான சகவாழ்வை இல்லாமல் செய்யவும் கூடியவை.
அந்தவகையில், இத்தகைய கருத்துக்களை முன்வைத்து குறிப்பாக பெரும்பான்மை இன சிங்கள இளைஞர்களைத் தூண்டி, தொடர்ச்சியாக இந்நாட்டில் குழப்பகரமானதொரு சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் பொது பல சேனாவினரின் நடவடிக்கைகளைச் சட்டம் தண்டிக்கவில்லையென்றால் இறைவனின் தண்டனை அவர்களைத் தண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனக் கூற விரும்புவதாக அமைச்சர் உதுமாலெப்பை மேலும் குறிப்பிட்டார்

.jpg)