கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம்முறை உயர் தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெறுபேற்றினை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் கலைப் பிரிவு மாணவர்களுக்கான இலவச செயலமர்வுகள் நடத்தப்படவுள்ளன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் நடாத்தப்படுகின்ற இச் செயலமர்வுகள் எதிர்வரும் 16.07.2014 தொடக்கம் 25.07.2014 வரை கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா ஞபகார்த்த மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை நடைபெறும்.
குறிப்பிட்ட பாடங்களுக்கான செயலமர்வுகள் முறையே, 16.07.2014 - புவியியல், 17.07.2014 - நாடக அரங்கியல், 18.07.2014 - அரசியல் விஞ்ஞானம், 21.07.2014 - தமிழ், 22.07.2014 - அளவையியல், 24.07.2014 - பொருளியல், 25.08.2014 - இந்து நாகரிகம் ஆகிய திகதிகளில் நடைபெறும் என்று கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் அனைவரையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்கள் கட்டாயம் பாடசாலைச் சீருடையுடன் சமூகம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: 1. பு.மணிவண்ணன் - 0774927286, 2. வ.நிரோசன் 0773521838 ஆகியோரையும் தொடர்பு கொள்ள முடியும்.