விவசாய வினாடி வினாப் போட்டியில் முதலிடம்.

(சக்தி)  


மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி விவசாய வினாடி வினாப் போட்டியில் வலய மட்டத்தில் முதலிடம் பெற்று மாகாண மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

வலய மட்ட விவசாய வினாடி வினாப் போட்டி திங்கட் கிழமை (07) மட்.பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் வேதநாயகம்-கேனகா என்ற மாணவி முதலிடம் பெற்று பாடசாலைக்கும், கிராமத்திற்கும், கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதோடு, மாகாண மட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளதாக மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் சி.சிவபாதம் தெரிவித்தார்.



மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் த.தருமசீலன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இம்மாணவி வெற்றி பெற்றுள்ளதாகவும், மாகாண மட்ட போட்டி அறிவிக்கப் பட்டதும் அதில் கலந்து கொள்ளச் செய்வதற்குரிய முன்ஏன்பாடுகள் இடம்பெறுவதாகவும் மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் சி.சிவபாதம் அவர்கள் மேலும் தெரிவித்தார்.