சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைக்கல்லாறு வடக்கு திருவள்ளுவர் வீதியினைச் சேர்ந்த சுப்பிரமணியம் - உதயகுமார் அவர்கள் சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா அவர்களின் மன்னிலையில் கடந்த 2014.07.15 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மட்.கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தற்போது நில அளவைத் திணைக்களத்தின் வந்தாறுமூலை காரியாலயத்தில் நில அளவை மேற்பார்வையாளராக கடமை புரிந்து வருகின்றார்.


இவர் கோட்டைக்கல்லாறு மாரியம்மன் ஆலயத்தில் வண்ணக்கராகவும், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினராகவும், அனர்த முன்னாயத்தக் குழு தலைவரும், இலங்கை மனித உரிமை அமைப்பின் அங்கத்தவரும், கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையின் பொருளாளருமாக இருந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றாவர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.