வந்தாறுமூலை ம.ம.வித்தியலாயத்தில் தொழிநுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(நித்தி) சித்தாண்டி-வந்தாறுமூலை மத்திய மகா வித்தியலாயத்திற்கான மகிந்தோதய தொழிநுட்பவியல் பீடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் கலந்துகொண்டு இன்று (11.07.2014) சுபவேளையில் மூன்று மாடிக்கட்டடத்திற்கு அடிக்கல்லை நாட்டுவைத்தார்.

பாடசலையின் அதிபர் திரு.ரவி தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கல்குடா கல்விவலய பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, அழைப்பு அதிதியாக ஏறாவூர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 


நிகழ்வின்போது தேசிய கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து பின்பு அதிதிகளினால் அடிக்கல் நடப்பட்டு,  மகிந்தோதய தொழிநுட்பவியல் பீடத்திற்கான 250 இலட்சம் பெறுமதியான கட்டத்திற்கான அடிக்கல் நடல் ஞாபகார்த்த திரை நீக்கப்பட்டதையடுத்து பாடசாலையின் நல்லையா மண்டபத்தில் அதிதிகளின் உரை மற்றும் மாணவர்கள், ஆசிரியர்களுடானான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.