தேசிய மட்ட தமிழ் தினப் போட்டி- வாசிப்பில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முதல் இடம்

2014ம் ஆண்டுக்கான தேசிய மட்ட தமிழ் தினப்போட்டியின் இரண்டாம் பிரிவிற்கான வாசிப்பு போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 06ம் தரத்தில் கல்வி பயிலும் செல்வன் துரைராஜசிங்கம் இமையவன் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

கடந்த 2014.07.25ம் திகதி கொழும்பு மத்தி இந்துக் கல்லூhயில் இடம்பெற்ற போட்டியிலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் அண்மையில் இடம்பெற்ற 2014ம் ஆண்டுக்கான கீழ்ப்பிரிவு கணித வினாவிடைப் போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கான குழு அங்கத்தவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான துரைராஜசிங்கம், ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி கலையரசி துரைராஜசிங்கம் ஆகியோரின் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.